அன்பு நண்பர்களே,
நேற்று Tamilish Blog-இல் ஆயிரத்தில் ஒருவன் பற்றி நிறைய விமர்சனங்கள்.
சிலவை போற்றி - சிலவை தூற்றி .நான் எனக்கு நானே விமர்சகன்.
இரவு காட்சி பார்க்க நண்பர் ஜெயகணேஷ்-உடன் Multiplex சென்றேன்.
படம் 3 மணி நேரம் - 15 நிமிடம்.
ஒரு மிகச் சிறப்பான படம் பார்த்த சந்தோசம்.
Hats off to செல்வராகவன்.
S.P. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் வரிசையில் தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல ஒரு டைரக்டர் வந்து விட்டான் என்ற சந்தோசம் இருந்தது படம் முடிந்த பிறகு.
நான் பாண்டியன், இருந்தும் நேற்று சோழன் வாழ விருப்பப்பட்டேன்.
அவ்வளவு உயிரோட்டமாக இருந்தது.
பார்த்திபன் நடிப்பு மிக அருமை. அவர் நிறைய கேரக்டர் ரோல்கள் செய்ய வேண்டும். தமிழ் சினிமா ஒரு நல்ல நடிகரை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கார்த்தி ஒரு அற்புதமான நடிகர். மீண்டும் அதை நிருபித்து விட்டார்.
என்ன அருமையான முக பாவனைகள். அவர் கமலின் வாரிசாக வருவார் என்று நம்புகிறேன்.
ஆண்ட்ரியா கொள்ளை அழகு. செல்வராகவன் சோனியா அகர்வாலை divorce -செய்ததில் ஒரு நியாயம் இருக்கத்தானே செய்கிறது.
ஒரு ஆங்கில படத்தை மிஞ்சிய தமிழ் படம்.
சமீபத்தில் வந்த பேராண்மை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவை நிச்சயம் ஒரு புதிய பாதையில் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.
மறந்து விட்டேன் G.V.பிரகாஷ் music பற்றி எழுத.
இன்னொரு ஆஸ்கார் நிச்சயம் இந்த பையனுக்கு கிடைக்கும் எதிர்காலத்தில்.
எல்லோரும் சென்று படத்தை நல்ல theatre-இல் பாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment